மேலாண்மை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை : தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் நடத்தும், பட்டப்படிப்பில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில், பி.ஏ., - எம்.ஏ., தொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்பு, பி.ஜி.டி.எல்.ஏ., முதுநிலை மாலை நேர பட்டய படிப்பு, வார இறுதி பட்டய படிப்புகள் நடத்தப்படுகின்றன.இந்த படிப்புகள், தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு, பிரத்யேக கல்வி தகுதியாக, தொழிலாளர் நல அலுவலர்கள் விதிகளில் வரையறுக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பி.ஏ., தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்பிற்கான விண்ணப்பத்தை, tilschennai@tn.gov.in என்ற இ -- மெயில் வழியே பெறலாம்.

மின்னஞ்சலுக்கு, தங்கள் பெயர், டெலிபோன் எண், இ -- மெயில் முகவரி விபரங்களை அனுப்ப வேண்டும்.விண்ணப்ப கட்டணம், 200 ரூபாய்; எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 100 ரூபாய். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஆகஸ்ட், 5க்குள் வந்தடைய வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 98841 59410, 044- - 2844 0102, 2844 5778 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.