வங்கி கணக்கின் இருப்பு அறிய புதிய மொபைல் எண் அறிமுகம்

images%2528169%2529
இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள், தங்களின் கணக்கு இருப்பு விபரம் 

அறிய, 81087 81085 என்ற, புதிய மொபைல் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த மொபைல் போன் எண், சில மாதங்களாக செயல்படாமல் இருந்தது. அதனால், கணக்கு இருப்பு விபரம் அறிய முடியவில்லை என, வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், பழைய மொபைல் போன் எண்ணிற்கு பதிலாக, புதிய மொபைல் எண்ணை, இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது.இது குறித்து, இந்தியன் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கின் இருப்பு விபரம் அறிய, தற்போது, 81087 81085 என்ற, புதிய மொபைல் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மொபைல் எண்ணை பயன்படுத்தி, இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்கில் உள்ள பண இருப்பு விபரங்களை அறிய முடியும். வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வதற்காக, அனைத்து வங்கிகளிலும், இந்த புதிய மொபைல் எண் ஒட்டப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.