சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை அறிவிப்பு:

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை முற்றிலும் ஆன்லைன் வழியாக மட்டுமே நடைபெறும். மாணவர்கள் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு மூலமும், மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சேர்க்கை மாநில அரசின் ஒருங்கிணைந்த கலந்தாய்வு மூலம் நடைபெறும். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் (www.annamalaiuniversity.ac.in) - பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமோகன் தகவல்.