அண்ணாமலை பல்கலை 'ஆன்லைன்' சேர்க்கை

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக படிப்புகளில் சேர, மாணவர்கள், 'ஆன்லைன்' வழியாக, விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலை பதிவாளர், கிருஷ்ணமோகன் செய்திக்குறிப்பு: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், 20-21ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பட்டம், ஒருங்கிணைந்த முதுகலை பட்டயம் சான்றிதழ் படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு மிக்க செயல்திறன் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. ஆகஸ்ட், 17 வரை விண்ணப்பிக்கலாம். இப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை, தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு வழியாகவும், மருத்துவம், பல் மருத்துவ படிப்புக்கான சேர்க்கை, மாநில அரசின் ஒருங்கிணைந்த கலந்தாய்வு வழியாகவும் நடக்கும். இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை முற்றிலும், 'ஆன்லைன்' வழியாக நடக்கும். எனவே, மாணவர்கள், தங்களது அனைத்து சான்றிதழ்களையும், விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.