ஏன் வருகிறது பணி நிரவல் ? காரணங்கள்!

தமிழகப் பள்ளிகளில் (அரசு / அரசு உதவி பெறும் மேல்நிலை , உயர்நிலைப் பள்ளிகள் மட்டும் ) உள்ள Surplus ஆசிரியர்களுக்கான பட்டியல் .
 
தமிழ் , ஆங்கிலம் , கணக்கு , அறிவியல் , சமூக அறிவியல் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களது எண்ணிக்கையில் இவ்வளவு பேர் அதிகமாக இருப்பதாகவும் , பணி நிரவல் செய்யப் போவதாகவும் இணையத்தில் வெளிவந்து கொண்டு இருக்கிறது.
ஏற்கனவே பணி நிரவல் குறித்து எழுதி இருக்கிறேன். எனது பெயரும் இந்த லிஸ்டில் இருக்கு . அதுவல்ல பிரச்சனை .
உதாரணத்திற்கு எனது பள்ளியில் ....
6 ஆம் வகுப்பில் 3 பிரிவுகள்
7ஆம் வகுப்பில் 4 பிரிவுகள்
8 ஆம் வகுப்பில் 3 பிரிவுகள்
9 ஆம் வகுப்பில் 6 பிரிவுகள்
10 ஆம் வகுப்பில் 7 பிரிவுகள் ...
மொத்தம் 23 வகுப்புகள் உள்ளன.
இதில் கற்பிக்க இருக்கும் ஆசிரியர்களில் தமிழுக்கு ஏற்கனவே ஆள் பற்றாக்குறை 2 வகுப்புகளுக்கு  சிறப்பு ஆசிரியர்கள் (Special Teachers) என அழைக்கப்படும்  கைவேலை ஆசிரியர்கள் தான் கற்பிக்கின்றனர்.
ஆங்கிலப் பாடத்தைக் கற்பிக்க  ஆசிரியர்களது பற்றாக்குறையால் கணக்கு, சமூக அறிவியல் உள்ளிட்ட பாட ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர் (நானும் ஆங்கிலம் கற்பிக்கின்றேன் )
ஒரு பட்டதாரி ஆசிரியர் உதவித் தலைமை ஆசிரியராக இருப்பதால் நிர்வாகப் பணி முதற்கொண்டு கூடுதல் சுமை , மேலும் அவருக்கு வகுப்புகள் குறையும்.
இருக்கும் வகுப்புகளில் குழந்தைகள் எண்ணிக்கை 50 லிருந்து 36 வரை ஆங்கில வழிப் பிரிவுகளில் உள்ளனர் ,தமிழ் வழியில் 10 முதல் 30 வரை இருக்கின்றனர். எனில் ஆசிரியர் மாணவர் விகிதம் என்று பார்த்தால் .....கவனிப்பது சற்று கடினமாகவே உள்ளது. எனில்
 7 ஆசிரியர்களின் பெயர்கள் பணி நிரவல் பட்டியலில் வந்துள்ளது.
இதே போல , தமிழகமெங்கும் 12110 ஆசிரியர்கள் எண்ணிக்கை வந்திருக்கும் சூழலில் அனைவரும் பதட்டத்தில் உள்ளனர். எங்கே பணி மாறுதலில் அனுப்புவார்களோ ? என்று தினமும் பள்ளிகளில் ஆசிரியர்களிடையே  2 கொஞ்ச நாட்களாக பேச்சும் , மன உளைச்சலும் ....
ஏன் வருகிறது பணி நிரவல் ? காரணங்களாக .....
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்து வருகிறது.
அரசுப் பள்ளிகளில் 5 வகுப்புகளுக்கும்  சேர்த்து ஒரு ஆசிரியர் , இரண்டு ஆசிரியர் மட்டும் இருப்பதால் .
கழிப்பறை , குடிநீர் வசதிகள் எதுவும் முறையாகப் பராமரிக்கப் படாமல்  பாதுகாப்பு இல்லாத சூழலால் ....
கல்வி உரிமைச் சட்டத்தின் படி 25% சதவீத மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு அரசாலேயே அனுப்பப்படுவதால்
அதிகமான தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதால் .....
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
உமா