
சேதமடைந்த மின் சாதனங்கள் தொடர்பாக, பொதுமக்கள், 'வாட்ஸ் ஆப்' எண்ணிற்கு அனுப்பும் புகார் மீது, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, பிரிவு அலுவலக பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழக மின் வாரியம், சேதமடைந்த மின் சாதனங்களை சீரமைக்குமாறு அறிவுறுத்தினாலும், பிரிவு அலுவலகங்களில் பணிபுரிவோர், அந்த பணிகளை முழுதுமாக செய்வதில்லை.இதனால், பொதுமக்கள், சேதமடைந்த சாதனங்களை புகைப்படம் எடுத்து, எந்த இடம் எனக் குறிப்பிட்டு, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக, மொபைல் போனில் புகார் தெரிவிக்கும் வசதி, மூன்று ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது.இதற்காக, மாவட்டங்கள் வாரியாக, 'வாட்ஸ் ஆப்' எண்களையும், மின் வாரியம் வெளியிட்டது. பலருக்கு, அந்த விபரம் தெரியவில்லை.மழை காலம் துவங்க உள்ளதால், சேதமடைந்த சாதனங்களை சீரமைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்காக மீண்டும், 'வாட்ஸ் ஆப்' எண்கள் வெளியிடப்பட்டு உள்ளன.