பி.எப்., வட்டி7.1 சதவீதம்

சென்னை : பொது வருங்கால வைப்பு நிதிக்கு, 7.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பணியாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும், பொது வருங்கால வைப்பு நிதிக்கு, ஏப்., 1 முதல், ஜூன், 30 வரை, 7.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து,ஜூலை 1 முதல், செப்., 30 வரை, 7.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.