இன்ஜி., படிப்பு 42 ஆயிரம் விண்ணப்பம்

சென்னை : இன்ஜினியரிங் படிப்பில் சேர, இரண்டு நாட்களில், 42 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். Top Engineering Colleges in Karnataka, India's Best Institutes


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், இன்ஜினியரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பணிகள் துவங்கியுள்ளன.தமிழக உயர்கல்வித் துறை சார்பில், தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே, 'ஆன்லைன் கவுன்சிலிங்' நடக்க உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூலை, 15 மாலை, 6:00 மணி முதல் துவங்கியது.முதல் நாளில், 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இரண்டாம் நாளான நேற்று மாலை வரை, 42 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை, 25 ஆயிரம் பேர், விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர்.