கல்லுாரியில் சேர வரும், 31க்குள் விண்ணப்பம்

சென்னை : 'அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப் படிப்பில் சேர, 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. 250+ Great College Photos Pexels · Free Stock Photos


தமிழக உயர்கல்வித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப் படிப்பில் சேர, 20ம் தேதி முதல் வரும், 31 வரை, www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற, இணையதளங்களில்பதிவு செய்யலாம்.இதேபோன்று, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய, ஜூலை, 25 முதல், ஆகஸ்ட், 5 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை தொடர்பாக, சந்தேகம் இருந்தால், 044 - 2235 1014, 2235 1015 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கொரோனா தொற்றை தவிர்க்கும் பொருட்டு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2020 - 21ம் கல்வி ஆண்டுக்கான, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவை, ஜூலை, 20 முதல் இணையதளம் வழியே மட்டும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.