பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் 24ல் பொது தேர்வு முடிந்தது. ஊரடங்கு அறிவிப்பு காரணமாக, மார்ச் 24ம் தேதி நடந்த தேர்வை, சில மாணவர்கள் எழுதவில்லை. மொத்தம், 36 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என, தெரிய வந்தது. இதையடுத்து, தேர்வுத்துறை சார்பில், மறுதேர்வு எழுத விரும்பும் மாணவர்களிடம் விருப்ப கடிதம் பெறப்பட்டது.மொத்தம், 780 மாணவர்கள் மட்டுமே, தேர்வை எழுத விருப்பம் தெரிவித்தனர். அவர்களுக்கான மறுதேர்வு, இன்று தமிழகம் முழுதும் நடக்கிறது.
பொது போக்குவரத்து இல்லாததால், மறு தேர்வுக்குவிருப்பம் தெரிவித்த மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளியிலேயே தேர்வு எழுத சலுகை வழங்கப்பட்டுள்ளது.