நாளை வெளியாகிறது பிளஸ்-1 தேர்வு 'ரிசல்ட்'

சென்னை: பிளஸ் 1 பொது தேர்வு மற்றும் பிளஸ் 2 மறு தேர்வுக்கான முடிவுகள், நாளை வெளியிடப்படுகின்றன.


இதுகுறித்து, தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிளஸ் 1 பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கும், பிளஸ் 2 ஒரு பாடத்துக்கு மறு தேர்வு எழுதிய மாணவர்களுக்கும், நாளை காலை, 9:30 மணிக்கு, முடிவுகள் வெளியிடப்படும். பதிவு எண், பிறந்த தேதி, மாதம் மற்றும் ஆண்டு ஆகியவற்றை பதிவு செய்து, தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.தேர்வுத் துறையின், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில், தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களின், மொபைல் போன் எண்ணுக்கும், தனித் தேர்வர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட எண்ணுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்படும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதியும், மதிப்பெண் பட்டியலை பெறும் தேதியும், பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.