ஜூலை
14- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை 05.00 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தகவல் கூறுகின்றன.
தமிழகத்தில் விருதுநகர், மதுரை, சேலம், நெல்லை, திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.