பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடப் பிரிவுகள் நீக்கம்

சென்னை; பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு அறிமுகம் செய்யப்பட்ட, ஐந்து பாடங்கள் இணைந்த, புதிய பாடப் பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், புதிய பாடப் பிரிவுகள் அறிவிக்கப்பட்டன. அதாவது, இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் கலை அறிவியல் பட்டப்படிப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு, தனித்தனியே, மூன்று முக்கிய பாடங்கள் இணைந்த, பாடப் பிரிவு அறிமுகம் செய்யப்பட்டன.புதிய அரசாணைதற்போது, மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றுடன், நான்கு முக்கிய பாடங்கள் இணைந்த, பாடப் பிரிவுகள் அமலில் உள்ளன. புதிய அரசாணைப்படி, மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலத்துடன், மூன்று முக்கிய பாடங்கள் மட்டும் இணைந்த பாடப் பிரிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதற்கு, பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. புதிய பாடப் பிரிவுகளில், ஏற்கனவே உள்ள நான்கு பாடங்களுக்கு பதில், மூன்று முக்கிய பாடங்கள் மட்டும் இருப்பதால், மாணவர்களுக்கான உயர் கல்வி வாய்ப்புகள் குறையும் என, சில ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.ஆனால், புதிய கல்வி ஆண்டில், மூன்று பாடங்கள் இணைந்த, புதிய பிரிவுகளுடன், நான்கு பாடங்கள் இணைந்த, பழைய பாடப் பிரிவும் அமலில் இருக்கும் என்பதை, பள்ளி கல்வித் துறை முறையாக விளக்கவில்லை.

இதன் காரணமாக, ஆசிரியர்களும், அரசியல் கட்சிகளும், மூன்று பாடங்கள் இணைந்த, புதிய பாடப் பிரிவு மட்டும் தான் அமலில் இருக்கும் என, நினைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.கட்டாயம்இந்நிலையில், புதிதாக அறிமுகம் செய்துள்ள, மூன்று முக்கிய பாடங்கள் இணைந்த பாடப் பிரிவுகள் அமலுக்கு வராது என, தமிழக அரசு, நேற்று அறிவித்தது. இந்த கல்வி ஆண்டில், ஏற்கனவே உள்ள, நான்கு முக்கிய பாடங்கள் இணைந்த பாடப் பிரிவுகளில் மட்டுமே, பிளஸ் 1ல் மாணவர் சேர்க்கப்படுவர் என்றும், அரசாணையில் கூறப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் பல ஆண்டுகளாக, இதுபோன்ற தனித்தன்மையுள்ள பாடப் பிரிவுகள் உள்ளன.

அதை பின்பற்றி, தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிக்கு முட்டுக்கட்டை விழுந்து உள்ளது.புதிய பாடப் பிரிவுகள் குறித்து, சில ஆசிரியர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தவறான புரிதல்களுக்கு, தமிழக பள்ளி கல்வித் துறை தெளிவான விளக்கம் அளித்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது.இதன் காரணமாக, கற்றலில் பின்தங்கிய மாணவர்கள், பிளஸ் 2 முடிப்பதற்கு, கூடுதலாக, ஒரு பாடத்தை படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கல்லுாரி மற்றும் பல்கலைகளில், அவர்கள் தங்களுக்கு ஏற்ற பாடப் பிரிவுகளை தேர்வு செய்யும் வாய்ப்பும் பறிபோய் உள்ளது.