சென்னை:முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கொரோனா நோயாளிகள்
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அரசு வழி வகை செய்துள்ளது.
காப்பீட்டின்
கீழ்
மருத்துவமனைகளுக்கு செலுத்தப்பட உள்ள கட்டண விபரங்களையும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ளார்.
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயிப்பது குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.இதற்கிடையே ஐ.எம்.ஏ.எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் அரசுக்கு ஒரு பரிந்துரை அளித்தது.
* கொரோனா பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவ வசதி உபகரணங்கள் மருந்து செலவு உணவு உள்ளிட்டவைகளுடன் 10 நாட்களுக்கு 2 லட்சத்து 31 ஆயிரத்து 820 ரூபாய் கட்டணமாக
நிர்ணயிக்கலாம்
*தீவிர சிகிச்சை ஐ.சி.யூ.வில் இருக்கும் நோயாளிகளுக்கு குறைந்தது 17 நாட்களுக்கு 4 லட்சத்து 31 ஆயிரத்து 411 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்க பரிந்துரைத்தது.
இதுகுறித்து ஐ.எம்.ஏ. தமிழக பிரிவு தலைவர் ராஜா கூறுகையில் ''அரசுக்கு அளித்துள்ள பரிந்துரை கடிதத்தில் நோயாளிகளுக்கு ஆகும் செலவு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. டாக்டர்கள் நர்ஸ்களின் சம்பளம் சேர்க்கப்படவில்லை'' என்றார்.
அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தனியார் மருத்துவமனைகள் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் போது
அவர்களுக்கு அரசு வழங்க வேண்டிய தொகுப்பு கட்டணங்கள் குறித்து ஆய்வு செய்ய
சுகாதாரத்துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.அதில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் ஒரு நாள்
சிகிச்சைக்கான அதிகபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* பொது பிரிவு: அறிகுறி இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்களுக்கு 'கிரேடு ஏ1 முதல் ஏ4' வரையிலான அனைத்து மருத்துவமனைகளுக்கும் 5000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
* ஐ.சி.யூ.: அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு கிரேடு ஏ1 ஏ2 வகை மருத்துவமனைகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய்; கிரேடு ஏ3 ஏ4 மருத்துவமனைகளுக்கு 9000 ரூபாய் முதல் 13 ஆயிரத்து 500 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.
*அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் உள்ள மொத்த படுக்கை எண்ணிக்கையில் 25 சதவீதத்தை முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சைக்கு வரும் கொரோனா நோயாளிகளுக்கு பிரத்யேகமாக ஒதுக்க வேண்டும்
* முதல்வர் காப்பீட்டு திட்ட பயானாளிகள் மருத்துவமனைகளுக்கு எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
* நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகை செலுத்தகோரும் மருத்துவமனைகளின் மீது முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும்
* மேலும் விபரங்கள் மற்றும் புகாருக்கு 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அதேநேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் நேரடி சிகிச்சைக்கான கட்டண நிர்ணயம் குறித்து எந்த அறிவிப்பும் அரசு தரப்பில் வெளியிடப்படவில்லை.

முதல்வர் காப்பீடு
இந்நிலையில்
தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா
சிகிச்சை பெற தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. கட்டணத்தை காப்பீட்டு
நிறுவனங்கள் செலுத்தும். இதற்கான கட்டண விபரங்களை சுகாதாரத்துறை அமைச்சர்
விஜயபாஸ்கர் நேற்று வெளியிட்டார்.அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தனியார் மருத்துவமனைகள் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் போது
அவர்களுக்கு அரசு வழங்க வேண்டிய தொகுப்பு கட்டணங்கள் குறித்து ஆய்வு செய்ய
சுகாதாரத்துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.அதில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் ஒரு நாள்
சிகிச்சைக்கான அதிகபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* பொது பிரிவு: அறிகுறி இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்களுக்கு 'கிரேடு ஏ1 முதல் ஏ4' வரையிலான அனைத்து மருத்துவமனைகளுக்கும் 5000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
* ஐ.சி.யூ.: அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு கிரேடு ஏ1 ஏ2 வகை மருத்துவமனைகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய்; கிரேடு ஏ3 ஏ4 மருத்துவமனைகளுக்கு 9000 ரூபாய் முதல் 13 ஆயிரத்து 500 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.
நிபந்தனைகள் என்ன?