2020 - 2021 ஆசிரியர்கள் சவால்களுடன் பயணிக்க உள்ள கல்வியாண்டு !

2020 - 2021 சவால்களுடன் பயணிக்க உள்ள கல்வியாண்டு :
கரோனா வைரசை எதிர்கொள்ள NCERT ன் பரிந்துரைகள் ....
1. வாரத்தின் மூன்று நாட்கள் ஒற்றை இலக்க பதிவெண் கொண்ட மாணவரும் , அடுத்த மூன்று நாட்கள் இரட்டை இலக்க பதிவெண் கொண்ட மாணவரும் பள்ளிக்கு வர வேண்டும்.
2. திறந்த வெளி வகுப்புகள் கூடுதல் பாதுகாப்பு தரும்.


 3. அதிக பட்சம் ஒரு வகுப்பில் 30 மாணவர்கள் மட்டுமே அனுமதி .
 
4. மாணவரிடையே 6 அடி இடைவெளியுடன் இருக்கை தர வேண்டும். தமக்கு தரப்பட்ட இருக்கைகள் எப்போதும் மாற்ற கூடாது.
 challenge dreams meaning What Woman Needs
5. தினமும் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே ஆசிரியர் , மாணவர் பள்ளிக்குள் அனுமதி . வெப்ப மாறுபாடு இருப்பின் தகுந்த மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவர்.
6. பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடைபெற கூடாது. மாற்றாக தொலைபேசியில் உரையாடலாம்.
7. பள்ளி இடைவேளைகளின் போதும், விளையாட்டு பாட வேளையிலும் மாணவர்கள் உடலால் தனித்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
8. எழுதுபொருள் ,உணவு, தண்ணீர் பாட்டில் என எவற்றையும் பிள்ளைகள் பரிமாறி கொள்ளக் கூடாது.
9. முக கவசம் அணிவது கட்டாயம். கைகளை ஒவ்வொரு இடைவேளையிலும் கழுவுதல் வேண்டும்.
 
10. ஆறு கட்டங்களாக 3 மாதங்கள் இடைவெளியில் மேல் வகுப்பு முதல் மழலையர் வகுப்பு வரை படிபடியாக திறக்கப்படும்.
எதிர்வரும் கல்வியாண்டு சவால் நிறைந்த பயணம் . அன்பு பிள்ளைகளின் பாதுகாப்பை முதன்மையாக கொண்டு பயணிக்க சித்தமாவோம்.