பள்ளிகள் வாயிலாக 10ஆம் வகுப்பு தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அரசு அறிவித்த நிலையில் தனித்தேர்வர்களும் தேர்ச்சி என்ற அறிவிப்பை வெளியிட கல்வித்துறை ஆலோசனை செய்து வருகிறது.
10-ஆம் வகுப்பு தேர்வினை இந்த ஆண்டு தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள
அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை
ஆலோசித்து வருகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.