விடைத்தாள் திருத்தும் பணி: ஆசிரியர்கள் விபரம் சேகரிப்பு

திருப்பூர் மாவட்டத்தில், விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு, ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்கும் பணிகள் நடக்கிறது.நடப்பாண்டில், 'கொரோனா' பிரச்னையால் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கவில்லை. தற்போது, இப்பணிகளுக்கான ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்கும் பணிகள், திருப்பூர் மாவட்டத்தில் நடக்கிறது. தாராபுரம் மற்றும் திருப்பூரில் விடைத்தாள் 
மதிப்பீடு நடக்கிறது.ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், அந்தந்த பகுதிகளில் உள்ள மற்றும் வேறு மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளிலிருந்து வரும் முதுநிலை ஆசிரியர்களின் பெயர் பட்டியல்களை கல்வித்துறை சேகரித்துள்ளது. முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, இதுகுறித்து விபரங்கள் கேட்கப்பட்டு வருகின்றன