திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை மலைப்பகுதியில் உள்ள கூலி தொழிலாளர் குடும்பங்கள், வயதான, ஆதரவற்ற பெண்கள், உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் ஆசிரிய தன்னார்வலர்கள் மற்றும் சைன்திருச்சி சார்பாக அரிசி மற்றும் மளிகைப்பொருட்கள் வழங்கல்

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை
மலைப்பகுதியில் உள்ள  கூலி தொழிலாளர் குடும்பங்கள், வயதான, ஆதரவற்ற பெண்கள், உள்ளிட்ட  அனைத்து தரப்பினருக்கும் ஆசிரிய தன்னார்வலர்கள் மற்றும் சைன்திருச்சி சார்பாக அரிசி மற்றும்  மளிகைப்பொருட்கள் வழங்கல் 

*வழங்கிய ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களை வெறுங்கையுடன் அனுப்ப மனமின்றி வாகனத்தில் சௌ சௌ மூட்டைகள் அனுப்பி வைத்த சிறுமலை மக்கள்*


திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை மலைப்பகுதியில் உள்ள  கூலி தொழிலாளர் குடும்பங்கள், வயதான, ஆதரவற்ற பெண்கள், உள்ளிட்டவர்கள் சமூக வலைதளம் வாயிலாக கரோனா பாதிப்பு காலத்தில் தங்களது வாழ்வாதாரம் இல்லாத நிலையில் சமூக வலைதளம் வாயிலாக உதவி கோரி இருந்தனர்.   இந்நிலையில் அவர்களுக்கு உதவிட தன்னார்வலர்கள் சார்பாக *திருச்சி மாவட்டத்திலிருந்துஇன்று (9-5-2020) நேரில் சென்று அத்தியாவசிய மளிகைப் பொருட்கள்  மற்றும் அரிசி (₹.700) அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
பொருட்கள் வழங்கப்படும் போது அரசின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப சமூக இடைவெளியிடனும்முக கவசம் அணிந்தும்கிருமி நாசினி திரவம் கொண்டு கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர் பொருட்கள் தொகுப்பு *25 குடும்பங்களுக்கு* வழங்கப்பட்டது.
 
இத் தொகுப்பில்
அரிசி ஐந்து கிலோ ,
துவரம் பருப்பு ,
சர்க்கரை ,
கோல்டுவின்னர் எண்ணெய்,
மஞ்சள் தூள்,
மிளகாய்த்தூள் ,
சாம்பார் தூள் ,
மல்லித்தூள் ,
டீ தூள் ,
வெந்தயம் ,
சோம்பு ,
சீரகம் ,
கடுகு ,
சால்ட் உப்பு,
கோதுமை ,
விம்சோப்பு ,
ரின் சோப்பு,
ரவை ,
மிளகாய் ,
கொண்டகடலை
உட்பட் 20 பொருள்கள் இருந்தனமேற்கண்ட மளிகைப்பொருட்கள் இன்று நேரில் சிறுமலை சென்று வழங்கப்பட்டது.
 
*அத்தியாவசிய அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கியமைக்கு நன்றி தெரிவித்த மலைப்பகுதி மக்கள் தன்னார்வலர்கள் சென்ற வாகனத்தில் தங்கள் பகுதியில் விளைந்த  சௌ சௌ காய்கறி மூன்று  மூட்டைகள்  கொடுத்து மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தனர்.*
இந்நிகழ்வில் மணப்பாறை சிப்காட் வட்டாட்சியர் திருகோகுல்,  ShineTREEchy அமைப்பின்  நிறுவனர் திரு. மனோஜ் தர்மர், *சுப்பையா நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன் , மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, உறையூர் வடக்கு பட்டதாரி ஆசிரியர் குழந்தைசாமி, ஆர்.சி. நடுநிலைப்பள்ளி, கல்நாயக்கன் தெரு, ஆசிரியர் பெர்ஜித்ராஜன்* உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.