ஐ.சி.எஸ்.இ., பொதுத் தேர்வு அறிவிப்பு

சென்னை : இந்திய சான்றிதழ் படிப்பு வாரியமான, ஐ.சி.எஸ்.இ., சார்பில், 10ம் வகுப்பு
மற்றும் பிளஸ் 2 தேர்வுகள், மார்ச்சில் துவங்கின. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக, சில தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.இந்நிலையில், புதிய தேர்வு தேதியை, ஐ.சி.எஸ்.இ., நேற்று அறிவித்தது. இதன்படி, 10ம் வகுப்புக்கு, ஜூலை, 2 முதல், 12 வரையிலும்; பிளஸ் 2வுக்கு, ஜூலை, 1 முதல், 14 வரையிலும் தேர்வுகள் நடக்க உள்ளன.