மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி

சென்னை : உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், மாணவர்களுக்கு, திருக்குறள் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
\

சென்னை, தரமணியில், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள, திருக்குறள் ஓவிய காட்சி கூடத்தை மேம்படுத்தும் வகையில், மாணவர்களுக்கான திருக்குறள் போட்டிகள் நடத்தப்படுகின்றன.இணையவழியில் நடக்கும் இதில், திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. வெற்றி பெறும் மாணவர்களுக்கு, சான்றிதழ்கள் இணைய வழியாகவே அனுப்பி வைக்கப்படும்.

இதற்கான விண்ணப்பம் மற்றும் விபரங்களை, forms.gle/LsFwPVw77KzvYRE49 என்ற, 'லிங்க்' வழியாக தெரிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 91766 30415 என்ற, மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ள லாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.