மதுரை:கொரோனா
தொற்று சூழ்நிலையில் ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீது மாநில அரசு
மும்முனை தாக்குதலை தொடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொரோனாவை விரட்ட மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் அரசு ஊழியர்,
ஆசிரியர்கள் தன்னார்வலர்களாக பணிபுரிகின்றனர். ஒருநாள் சம்பளத்தை நிவாரணமாக
வழங்கினர். ஒரே நேரத்தில் அகவிலைப்படி நிறுத்தம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ரத்து, வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு ஆகிய நடவடிக்கைகளால் மனரீதியான பாதிப்பை அரசு ஏற்படுத்தியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க மாநில பொருளாளர் இளங்கோ
கூறியதாவது: அகவிலைப்படி என்பது மத்திய, மாநில அரசுகளின் விலை உயர்வு குறியீடுகள் அடிப்படையில் வழங்கும் நிவாரணம் ஆகும். அதை நிறுத்துவது பொருளதார பாதிப்பு
ஏற்படுத்தும். மத்திய அரசே அறிவிக்காத போது ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பினையும்
தடை செய்ததுஅரசின் வெறுப்பை காட்டுகிறது.
வருங்கால வைப்பு நிதி வட்டி சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதன் மூலம் மும்முனை தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும், என்றார்.