பொதுத் தேர்வுக்கு முன் வகுப்புகள் நடத்த வேண்டும்...! பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு!!!

பொதுத் தேர்வுக்கு முன் வகுப்புகள் நடத்த வேண்டும்...! பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு!!!
மாணவர்களுக்கு மீண்டும் வகுப்புகளை நடத்திய பிறகே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  
10 ஆம் வகுப்பு தேர்வுகளை தள்ளி வைக்கப் கோரி ஈரோடு மாவட்டம் கொங்கடை எனும் மலை கிராமத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி மீனாவின் தந்தை மாரசாமி பூசாரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிபாளையத்தில் படித்து வரும் தனது மகள், ஊரடங்கு காரணமாக விடுதியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அவசரகதியில் ஊர் திரும்பிய அவர், பாடப்புத்தகங்கள் எதையும் எடுத்து வர வில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்வில் கலந்து கொள்ள போக்குவரத்து வசதிகள் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்க கோரி கடலூரை சேர்ந்த இளங்கீரன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் அனிதா சுமந்து அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
 
அப்போது மாணவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதாராமலிங்கம், தங்கள் வழக்கையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என முறையிட்டார்.
  
மேலும் கிராமப்புறங்களிலும், மலை கிராமங்களிலும் வசிக்கும் மாணவர்களுக்கு புத்துணர்வு ஏற்படும் வகையில், வகுப்புகள் நடத்திய பிறகே தேர்வு நடத்த வேண்டும் என முறையிட்டார்.
இதை கேட்ட நீதிபதிகள், இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிடும்படி பதிவாளருக்கு உத்தரவிட்டனர்.