மத்திய அரசை பின்பற்றி கட்டுப்பாடுகளை தொடர தமிழக அரசு முடிவு

சென்னை : மத்திய அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி, தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


தமிழகத்தில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில் காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது. சுமார் 2:50 மணி நேரத்திற்கும் மேல் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஏற்னவே விதித்த தடையை தொடரவும், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் மத்திய அரசு விதித்த தளர்வுகளை பின்பற்றவும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், மே 17 வரை ஊரடங்கை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.