ஆசிரியர் கல்வியியல் படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு, வரும், 3௦ம் தேதி வரை
விண்ணப்பிக்க, அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., வழியாக, பல்வேறு மாநிலங்களில், ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்கள் செயல்படுகின்றன.இவற்றில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், ஒருங்கிணைந்த நான்காண்டு கல்வியியல் படிப்பை படிக்க, பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.