ஆகஸ்ட் 1 ஆம் தேதி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கு காரணமாக 
போக்குவரத்து மற்றும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தாக்கம் இன்னும் கட்டுக்குள் வராததால், எப்போது கல்வி நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் நிலவி வருகிறது.
 
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1 ஆம் தேதி துவங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.