மேலும் 14 நாட்களுக்கு இந்தியாவில் ஊரடங்கு

புதுடில்லி: நாடு முழுவதும் மேலும் 2 வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


latest tamil newsகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் முதன் முறையாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் 21 நாட்களுக்கு (ஏப்.14 வரை ) ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் சாலை,விமானம் , ரயில் போக்கு வரத்து முடக்கப்பட்டது.
தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஏப்., 14ம் தேதி முதல் மே மாதம் 3ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. வரும் 3 ம் தேதியுடன் முடிவடயை உள்ள நிலையில் பிரதமர் மோடி உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்படுள்ளதாவது:
வரும் 3 ம்தேதி முதல் 17 ம் தேதி வரையில் இரண்டு வாரங்களுக்கான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் ரயில் விமானம் சாலை போக்குவரத்துக்கு தடை அமலில் இருக்கும் . மேலும் கல்வி நிறுவனங்கள் ஹோட்டல்கள் மூடப்படும். தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

latest tamil newsதொடர்ந்து மத்திய அரசு வரையறுத்துள்ள ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் ஊரடங்கு தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.