விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைப்பு - தேர்வுத்துறை

2020 - 2021 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வானது மார்ச்ஏப்ரல் மாதங்களில் 10,11,12ஆம் வகுப்புகளுக்கு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு தொடங்கி நடந்துவந்த நிலையில்கோரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வு நடைபெறுவது தள்ளிபோகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 12ஆம்
வகுப்புக்கு மட்டும் பொதுத்தேர்வு முழுவதும் நடந்து முடிந்தது. 11ஆம் வகுப்புக்கு 1 தேர்வு மீதமுள்ளது. 10ஆம் வகுப்புக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்நிலையில் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணியானது கடந்த மார்ச் 31-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில்ஏப்ரல் 7ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக தெரிவித்தது தேர்வுத்துறை. தற்போது அந்த தேதியும் ஒத்திவைக்கப்படுவதாகவும்தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.'