மே 4ல் பணிக்கு வர அரசு பஸ் ஊழியர்களுக்கு அழைப்பு

தேவதானப்பட்டி:மே 4 ல் பணிக்கு வரவேண்டும் என தொழிலாளர்களிடம் அரசு
போக்குவரத்துகழக அதிகாரிகள் கூறி வருகின்றனர்.


கொரோனா பரவலை தடுக்க மார்ச் 24 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அரசு
பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு மே 3 வரைநீட்டிக்கப்பட்டுள்ளது. மே 4ல் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு வரவேண்டும் என அதிகாரிகள் அலைபேசி மூலம் தகவல் கூறி வருகின்றனர். சானிடைசர் மூலம் கை கழுவி , முகக்கவசம் அணிந்து பஸ்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.இதற்காக ஏப். 27முதல்
பணிமனைகளில் பஸ்கள் பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது