ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் ஒவ்வொரு மாதமும் வருகிற 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஓர் ஆண்டுக்கு பிடித்தம் செய்யப்படும் -மத்திய வருவாய் துறை

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி வருகிற மே மாதம் 3ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார். இதன் 
காரணமாக இந்தியா முழுவதும் அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை. இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பெருமளவில் பணத்தேவைகளும் ஏற்பட்டுள்ளது.