அரசின் தற்போதைய நடவடிக்கைகள் 2003ம் ஆண்டுக்கு திரும்பிச் செல்லும் முயற்சி - ஜாக்டோ ஜியோ கண்டனம்!

கொரோனா காரணமாக கடந்த 35 நாட்களாக ஊரடங்கு தொடர்வதால் தமிழக அரசு பெரும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களது ஊதியம் தொடர்பாக பெறும் சலுகைகளில் பலவற்றை குறைத்து தமிழக அரசு இன்று 3 அரசாணைகளை வெளியிட்டுள்ளது.
 
அவை,
1). 1.1.2020 முதல் 30.6.2021வரை அகவிலைப்படி (DA )நிறுத்தி வைப்பு. அகவிலைப்படி 17% மட்டுமே தொடரும்.
2). 27.4.2020 முதல் ஈட்டியவிடுப்பு (EL) ஓராண்டு காலம் நிறுத்தி வைப்பு
3). 1.4.2020 முதல் 30.06.2020 வரை முதல் காலாண்டிற்கு சேமநலநிதி வட்டி (GPF INTEREST) விகிதம் 7.1%. வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை மூன்று மாதத்திற்கு குறைத்து அரசாணை.வட்டி விகிதம் 7.9%-லிருந்து 7.1%-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு
 
ஏற்கனவே மத்திய அரசு குறைத்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஜாக்டோ ஜியோ கண்டனம்!
தமிழக அரசின் சரண் விடுப்பு, அகவிலைப்படி நிறுத்தி வைப்பு, வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு ஆகிய நடவடிக்கைகளுக்கு ஜாக்டோ ஜியோ கண்டனம்.
அரசின் தற்போதைய நடவடிக்கைகள் 2003ம் ஆண்டுக்கு திரும்பிச் செல்லும் முயற்சி என்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது