மூன்றாம் பருவ தேர்வு அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: தமிழகத்தில், பிளஸ் 2 வுக்கு மார்ச், 2; பிளஸ், 1க்கு, மார்ச், 4ல் பொதுத்தேர்வு துவங்கியது. 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு, வரும், 27ல் துவங்க உள்ளது.


இந்நிலையில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான மூன்றாம் பருவ தேர்வை, ஏப்ரல், 1ல் துவக்கி, 20க்குள் முடிக்க வேண்டும் என, முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதற்கேற்ப, அனைத்து வகுப்புகளுக்கும், பாடங்களை முன்கூட்டியே முடித்து, தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.