குரூப்-2 தேர்வு மூலம் 3 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்

நிலுவையில் உள்ள தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏப்ரலுக்குள் வெளியீடு குரூப்-2 தேர்வு மூலம் 3 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தகவல்
குரூப்-2, குரூப்-2- தேர்வுகள் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாகவும் நிலுவையில் உள்ள தேர்வுகளுக்கான அனைத்து அறிவிப்புகளும் ஏப்ரல் மாதத்துக் குள் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமார் தெரிவித்தார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர் களும், அலுவலர்களும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யம் மூலமாக தேர்வுசெய்யப்படு கிறார்கள்.
 
இதற்காக போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டித்தேர்வுகளுக்கு தயாரா கும் இளைஞர்கள் தேர்வுக்கு முன் கூட்டியே தயாராகும் வகையில் டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வரு டாந்திர தேர்வுக்கால அட்ட வணையை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் 2020-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையின்படி, ஜனவரி மாதத்தில் குரூப்-1 தேர்வு, உதவி வேளாண் விரிவாக்க அலு வலர் தேர்வு, தோட்டக்கலை உதவி இயக்குநர் தேர்வு, உதவி தோட் டக்கலை அலுவலர் தேர்வு ஆகிய 4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
 
இதில், குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு மட்டுமே ஜனவரி 20-ல் வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பம் நிறைவடைந்தது. எஞ்சிய 3 தேர்வுகளுக்கான அறி விப்புகள் இன்னும் வெளியிடப் படவில்லை.
 மார்ச் மாதம் தொடங்கிவிட்ட நிலையில், பிப்ரவரி மாதத்தில் வந்திருக்க வேண்டிய ஒருங்கி ணைந்த இன்ஜினீயரிங் பணி தேர்வுக்கான அறிவிப்பும் இன்னும் வரவில்லை. குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரம் காரணமாக, புதிய தேர்வு களுக்கான அறிவிப்புகளை வெளி யிடுவதில் காலதாமதமானது.
ஜனவரி, பிப்ரவரி மற்றும் நடப்பு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட வேண்டிய அறிவிப்புகள் எப் போது வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு படித்து வரும் தேர்வர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர்.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்த குமாரிடம் கேட்டபோது, "ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளியிடப் பட்டிருக்க வேண்டிய அனைத்து தேர்வுகளுக்கான அறிவிப்பு களும் ஒவ்வொன்றாக ஏப்ரல் மாதத்துக்குள் வெளியிடப்படும். வருடாந்திர தேர்வுக்கால அட்ட வணையில் இடம்பெற்றுள்ளவாறு குரூப்-2, குரூப்-2- தேர்வுகளுக் கான அறிவிப்புகள் மே மாதத்தில் வெளியாகும். இதன்மூலம் 3 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணி இடங்கள் நிரப்பப்படும்’’ என்றார்.
 குரூப்-2 தேர்வின்கீழ் நகராட்சி ஆணையர், சார்பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலு வலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் போன்ற பணிகளும், குரூப்-2- தேர்வின்கீழ் பல்வேறு துறைகளின் உதவியாளர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பணிகளும் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 இதற்கிடையே, சர்ச்சைக்குள் ளான குரூப்-4 தேர்வில், இள நிலை உதவியாளர், பீல்டு சர்வே யர், கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இக்கலந்தாய்வு மார்ச் 17-ம் தேதி முடிவடைகிறது. இந்த கலந்தாய்வின்போது, பொதுப்பிரி வில் 182 காலியிடங்கள் இருந்த போதிலும் அவை 2-வது கட்ட கலந்தாய்வுக்கு ஒதுக்கப்பட்டிருப்ப தாகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவின ருக்கு அதில் வாய்ப்பளிக்கப் படவில்லை என்றும் ஒருசில தேர்வர்கள் புகார் தெரிவித்திருந் தனர். இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளரிடம் கேட்டபோது, ‘‘ஒரு காலியிடத்துக்கு 3 பேர்" என்ற விகிதாச்சாரத்தில் பொதுப் பிரிவு காலியிடங்களுக்கு விண்ணப் பதாரர்கள் அழைக்கப்படுகிறார் கள்.
அந்த வகையில், புகார் எழுந்துள்ள 182 காலியிடங்களுக்கு தகுதியான பொதுப்பிரிவினர் உள்ளனர். அதனால்தான் மற்ற பிரிவினர் அந்த 182 காலியிடங் களுக்கான கலந்தாய்வுக்கு பரிசீலிக்கப்படவில்லை’’ என்று விளக்கம் அளித்தார்.ஒரு காலியிடத்துக்கு 3 பேர்" என்ற விகிதாச் சாரத்தில் பொதுப்பிரிவு காலியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
TNPSC Secretary Nandakumar Information Group-2, Group-2-A Exams will be filled with more than 3000 vacancies and all notifications for pending selections will be published by April. TNPSC Secretary K. Nandakumar said.
The Tamil Nadu Government Employees' Service Board is selected by the employees and officers of various departments of the Government of Tamil Nadu. Competitive exams are held for this purpose. TNPSC has been publishing the Annual Draft Selection Cover annually to prepare youngsters for the competition.
According to the Annual Selection Schedule for 2020, the announcement for the four selections will be published in January - Group-1, Assistant Agricultural Extension All-Wheeler Selection, Assistant Director of Horticulture and Assistant Tuttle Officer. Of these, only the notification for the Group-1 exam was published on January 20 and the online application was completed.
  Resources for the remaining 3 selections have not yet been released. Beginning in March, the announcement of the Combined Engineering Job Examination, which is due in February, is yet to be announced. Due to the Group-4 selection scandal, the announcement of new selection was delayed.
Candidates studying for TNBSC exams are very excited when the announcements will be made in January, February and the current March. When asked about this, TNPSC Secretary K. Nand Kumar said, “All the selections for the January and February selections will be published by April. May to cancel The vacancies will be filled. ”Under the Group-2 examinations are the municipal commissioner, dependent, deputy business officer, chief secretarial assistant officer, assistant labor inspector, junior employment alum valar, senior inspector of co-operatives There are also tasks including departments assistant, interview assistant Npatu noted. Meanwhile, controversy Prof Group -4 exam,
light-level assistant, Field Survey Yr, the village administrative officer of the Works Certificate Verification and Counseling February 19th starting date, has continued. Ikkalantayvu March 17 and ends on. During this consultation, a select few complained that despite 182 vacancies in the General Division, they were reserved for Phase 2 consultation and were not given the reservation category. The TNPSCsecretary asked,
'' a space of 3 persons ", the proportions of public sector vacancies in the application patararkal called to account. That way, the complaint raised by 182 vacancies eligible for General Candidates are. That's why the other sections of the 182 kaliyitan s meeting was not considering '' that explain Provided. A space of 3 persons "invited applicants for vacancies in the public sector and in essence vikitac.