10ம் வகுப்பு தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்'

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' வரும், 11ம் தேதி முதல் கிடைக்கும் என, தேர்வுத்துறை கூறியுள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு,
வரும், 27ல் துவங்க உள்ளது.இந்த தேர்வை எழுதவுள்ள, பள்ளி மாணவர்களுக்கான, ஹால் டிக்கெட், 11ம் தேதி முதல், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.பள்ளிகள் தரப்பில், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வழங்கலாம் என, அரசு தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.