மாணவர்களை திணறடித்த பிளஸ் 1 ஆங்கிலம் தேர்வு

மதுரை: பிளஸ் 1 ஆங்கிலம் பொதுத் தேர்வில் அதிக 'கிரியேட்டிவ்' வினாக்கள் இடம் பெற்றதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


பல மாற்றங்களுடன் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தி பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 மாணவர்கள் முதல் பொதுத் தேர்வை எதிர்கொள்கின்றனர். பிளஸ் 2 ஆங்கிலத்தில் புத்தகத்தில் இல்லாத, வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுக்கு கேட்பது போல் இடம் பெற்ற வினாக்களால் சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில் பிளஸ் 1 ஆங்கிலத் தேர்விலும் அதிக எண்ணிக்கையில் 'கிரியேட்டிவ்' வினாக்கள் இடம் பெற்றதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து ஆங்கில ஆசிரியர்கள் கூறியதாவது:புதிய வினாத்தாள் முறையில் முதல் தேர்விலேயே அதிக கடின வினாக்கள் இடம் பெற்றுள்ளது ஆசிரியர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பிளஸ் 1 ஆங்கிலத்தில் 'புக்பேக்'கில் இருந்து 50 சதவீதத்திற்கும் குறைவாகவே வினாக்கள் இடம் பெற்றுள்ளன. அதிலும் சில கடின முறை புகுத்தப்பட்டுள்ளது. பிற வினாக்கள் பாடத்தில் உள்ளவை என்றாலும் போட்டித் தேர்வுக்கு இணையான 'கிரியேட்டிவ்' முறையில் கேட்கப்பட்டுள்ளன. 50 சதவீத்திற்கு மேல் கடின வினாக்கள் இடம் பெற்றுள்ளன.கற்பித்தல் முறையில் அந்த அளவிற்கு மாற்றம் கொண்டு வந்த பின் இதுபோன்ற முறையில் வினாக்களை கேட்டிருக்கலாம் என்றனர்.