இனி எளிதாக வாங்கலாம் பான் கார்டு; விண்ணப்பிக்க வேண்டாம்!!

ஆதார் எண் அடிப்படையில் விண்ணப்பிக்காமல், உடனடியாக பான் கார்டு வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் வாசித்து 
வருகிறார். அவரது அறிவிப்பில் பான்கார்டு வாங்கும் நடைமுறை குறித்து தெரிவித்தார்.
இதுகுறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘‘பான்கார்டு தேவைப்படுவோர் இனிமேல் விண்ணப்பித்து வாங்கும் நடைமுறை தேவையில்லை. ஆதார் எண் அடிப்படையில் விண்ணப்பிக்காமல் உடனடியாக பான் கார்டு வாங்கிக் கொள்ளலாம்’’ எனக் கூறினார்.