பி.இ.ஓ., பதவி: தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை; 'வட்டார கல்வி அலுவலர் என்ற, பி.இ.ஓ., பதவிக்கான, 'ஆன்லைன்' தேர்வு, பிப்ரவரி, 14ல் இருந்து, மூன்று நாட்கள் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தலைவர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:பள்ளி கல்வித் துறையில், வட்டார கல்வி அலுவலர் பதவியில், 96 காலியிடங்களை நிரப்ப, ஜனவரி, 27ல், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்த பணி நியமனத்துக்கான ஆன்லைன் வழி தேர்வு, பிப்., 15, 16ல் நடக்கும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது தேர்வு நடக்கும் நாள், உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும், 14, 15, 16ல், தேர்வு நடக்கும். தேர்வர்களுக்கு தேர்வு எழுதும் மாவட்டம், பொதுவான முறையில் ஒதுக்கீடு செய்து, 10 நாட்களுக்கு முன் தெரிவிக்கப்படும். தேர்வு மையத்தின் விபரம், தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன் தெரிவிக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.