மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதங்கள் குறைப்பு

இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி
குறைக்கப்பட்டுள்ளது.
வருமான வரி குறித்து நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில், ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு இதுவரை இருந்த 20%வருமான வரி 10 % ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் இதுவரை செலுத்தி வந்த வருமான வரி 20%ல் இருந்து 15% ஆகக் குறைக்கப்படுகிறது.
மேலும், ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம்  வரை ஆண்டு வருமானம் பெறுவோர் இதுவரை செலுத்தி வந்த வருமான வரி 30%ல் இருந்து 20% ஆகக் குறைக்கப்படுகிறது.
ரூ.12.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோரின் வருமான வரி 30% இருந்து 25% ஆகக் குறைக்கப்படுகிறது.
ரூ.15 லட்சத்துக்கும் மேல்  ஆண்டு வருமானம் ஈட்டுவோரின் வருமான வரி 30% ஆகவே நீடிக்கும்.
ரூ. 5 லட்சம் வரை வருமான வரி இல்லை
ரூ.5 - 7.5 லட்சம் வரை : 10%
ரூ.7.5 - 10 லட்சம் வரை : 15%
ரூ.10 - 12.5 லட்சம் வரை: 20%
ரூ.12.5 - 15 லட்சம் வரை: 25%
ரூ.15 லட்சத்துக்கு மேல்: 30% ஆகவே நீடிப்பு