காணாமல் போன மொபைலை கண்டறிய புதிய App

உங்கள் மொபைலை காணவில்லை என்றால் உடனே பதற்றம் அடைய வேண்டாம், ஒருவேளை அது உங்கள் மிக அருகாமையிலேயே கூட இருக்கலாம், சைலன்ட் மோடில் இருக்கலாம்.
கடைசி வாய்ப்பாக தான் உங்கள் மொபைல் நிஜமாகவே காணாமல் போயிருக்கலாம். ஒரு வேளை சைலன்ட் மோடில் இருந்தால் காணாமல் போன மொபைலை கண்டுபிடிப்பது கடினம்.
 
ஜி.பி.எஸ் மூலம் 10-20 மீட்டர் தொலைவில் உள்ள மொபைலை கண்டறிய முடியும். ஒரு வேளை மொபைல் மூடிய இடத்தில் இருந்தாலும் ஜி.பி.எஸ் மூலம் எளிதாக கண்டுபிடிக்கலாம். அல்லது போன் வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டிருந்தால் MAC முகவரி வைத்து எளிதாக கண்டுபிடிக்கலாம்.
இந்த இரண்டு வழிகளின் மூலம் கண்டுப்பிடிக்கமுடியவில்லை என்றால் android device manager என்ற மொபைல் ஆப்பின் மூலம் காணாமல் போன மொபைல் எங்கு உள்ளது என்பதை தெளிவாக கண்டறிய முடியும்.
1. இதற்கு முதலில் ஆண்ட்ராய்டு கருவியில் பயன்படுத்தும் ஜிமெயில் அக்கவுன்ட் கொண்டு லாக்-இன் செய்ய வேண்டும்.
2 லாக் இன் செய்தவுடன் இங்கு உங்களது அக்கவுன்டில் இணைக்கப்பட்டிருக்கும் மொபைலை உங்களால் திரையில் பார்க்க முடியும்.
3. அந்த மொபைல் மாடல், மொபைலில் எவ்வளவு சார்ஜ் உள்ளது என்பதை காட்டும். மேலும் எந்த பகுதியில் மொபைல் உள்ளது. அது செயல்பாட்டில் உள்ளதா என்பது போன்ற தகவல்களை வழங்குகிறது.
4. காணாமல் போன மொபைல் சைலண்ட் மோடில் இருந்தால் அதனை இந்த ஆப் மூலம் ரிங் செய்ய இயலும்.
 
5.ஒரு வேளை காணாமல் போன மொபைல் அருகில் இருந்தாலோ அல்லது பைகளில் இருந்தாலோ எளிதாக கண்டுபிடிக்கலாம்.
லாக் அன்டு இரேஸ் என்ற ஆப்ஷன்கள் இருக்கும். ரிங் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தவுடன் உங்களது போன் சைலன்ட் மோடில் இருந்தாலும் ரிங் ஆகும். செயல்திறன்மிக்க மொபைல் டேட்டா அல்லது வைஃபை இணைப்பு இல்லாத மற்றும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்த கூகுள் டிவைஸ் மேனேஜர் செயல்படாது.