பி.எப்., வட்டி 7.9 சதவீதம்!

சென்னை: 'பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி, மார்ச் வரை, 7.9 சதவீதமாக
இருக்கும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.பணியாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும், பொது வருங்கால வைப்பு நிதிக்கு, 2019 அக்., 1 முதல், டிச., 31 வரை, 7.9 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதே வட்டி விகிதம், 2020 ஜன., 1 முதல், மார்ச், 31 வரை தொடரும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசை பின்பற்றி, தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.