பாரத பிரதமரின் பிட் இந்தியா திட்டத்தில் பள்ளிகள் 3, 5 ஸ்டார் ரேட்டிங் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். உடல் வலிமையை பேணும் வகையில் 'பிட் இந்தியா' என்ற திட்டத்தை, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒவ்வொருவரும் உடல் திறனை வளர்த்து கொள்ளவும், உடல் நலத்தை பேணும் வகையிலும், உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தில் பள்ளிகள் 3, 5 ஸ்டார் ரேட்டிங் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வி இயக்குநர் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: பிட் இந்தியா மூவ்மென்ட் சார்பாக www.fitindia.gov.in எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியரும் பிட் இந்தியா இயக்கத்தில் இணைய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். நோயற்ற இந்தியா என்ற கோஷத்தை முன்வைத்து வரும் அரசு அதற்கு உதவி புரியும் வகையில் 'பிட் இந்தியா' திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி, அதற்கான இணையதளத்தில் சென்று மாநிலத்திலுள்ள அனைத்து வகைப்பள்ளிகளும் பதிவு செய்து பிட் இந்தியா ஸ்கூல் சர்டிபிகேட் பெறவேண்டும். இதன் தொடர்ச்சியாக, இதே இணையதளத்தில் பிட் இந்தியா சார்ந்த வினாக்களுக்கு பதிலளித்தல் மூலம் பிட் இந்தியா பிளாக் 3 ஸ்டார் ரேட்டிங் அல்லது 5 ஸ்டார் ரேட்டிங் போன்றவற்றிற்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இப்பணியை உடனே முடிக்குமாறு அறிவுறுத்திட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் இப்பணியை தொடர் கண்காணிப்பு செய்வதற்கு அறிவுறுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயைப் போலவே தந்தைக்கும் 164 நாட்கள் பேறுகால விடுப்பு அறிவித்த பின்லாந்து அரசு..!
குழந்தை பிறப்பிற்கு பின் தாய்க்கு அளிக்கப்படுவது போலவே தந்தைக்கும் 164 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என பின்லாந்து அரசு அறிவித்துள்ளது.
 
பொதுவாக குழந்தைகள் வளர்ப்பு என்றாலே எல்லா பொறுப்புகளும் பெண்களுக்குத்தான் என்ற எண்ணம் உண்டு. ஆனால் இந்த எண்ணத்தை உடைத்திருக்கிறது பின்லாந்து அரசு. பின்லாந்தில், முற்றிலும் பெண்களை தலைமையாக கொண்ட கட்சிகளின் கூட்டணி ஆள்கிறது. கடந்த டிசம்பர் மாதம் 34 வயதான சன்னா மரின் பின்லாந்து பிரதமராக பதவியேற்றார். சில வாரங்களுக்கு முன்பு உலக பொருளாதார கூட்டமைப்பில் பேசிய சன்னா மரின், பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில், தங்கள் நாட்டில் பேறுகால விடுப்பு கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்போவதாக அறிவித்தார்.
அதன்படி, குழந்தை பிறப்புக்கு பின், தாயை போலவே தந்தைக்கும் 164 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என பின்லாந்து அரசு அறிவித்துள்ளது. இந்த 164 நாட்கள் விடுப்பில் தாயோ அல்லது தந்தையோ 69 நாட்கள் விடுப்பை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ளலாம். இதுவே தந்தை, தாய் இருவரில் ஒருவர்மட்டுமே இருக்கும்பட்சத்தில் அவருக்கு 3‌28 நாட்கள் பேறுகால விடுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை வளர்ப்பில் இரு தரப்புக்குமே சமமான பொறுப்பு இருப்பதை உணர்த்தும் வகையில் ஆண்களுக்கான விடுப்பு நாட்களை அதிகரித்துள்ளதாக பின்லாந்து அரசு கூறியுள்ளது