தொழில் பள்ளி துவங்க விண்ணப்பம் வரவேற்பு

சென்னை:அடுத்த கல்வியாண்டில், தொழில் பள்ளிகள் துவங்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழகத்தில், 2020 - 21ம் கல்வியாண்டில், ஜூலை, 1 முதல், புதிய தொழில் பள்ளிகள், தொடர் அங்கீகாரம் பெறுதல், தொழில் பள்ளிகளில் புதிய தொழில் பிரிவுகள் அல்லது கூடுதல் அலகுகள் துவங்க, இணையதளம் வழியே, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.skilltraining.tn.gov.in என்ற, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.அடுத்த கல்வியாண்டிற்கு, அங்கீகாரம் பெற, ஒரு தொழில் பள்ளி, ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதும். விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழில் பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகளுக்கு தேவையான விபரங்கள் அனைத்தையும், ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்க வேண்டும்.ஒவ்வொரு தொழில் பிரிவுக்கும், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம், ஆய்வு கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் ஆகியவை, இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.விண்ணப்பிக்க, ஏப்., 30 கடைசி நாள். மேலும் விபரங்களுக்கு, சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய இடங்களில் உள்ள, மண்டல பயிற்சி இணை இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.