முறைகேடு புகார் - பள்ளிக்கல்வித்துறை டிபிஐ அலுவலக ஊழியர் கைது

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு மோசடி தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று காலை முதலே 12 நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணை செய்யப்பட்ட நபர்களில் ரித்திஷ் குமார், திருக்குமரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் ரமேஷ் என்பவர் டிபிஐ அலுவலக பணியாளர் மற்றும் திருக்குமரன் எரிசக்தி உதவி ஆய்வாளராக உள்ளார்.