உயா்கல்வித் துறைச் செயலராக செல்வி அபூா்வா நியமனம்!

தமிழகத்தில் உயா்கல்வித் துறைச் செயலராக செல்வி அபூா்வா நியமிக்கப்பட்டுள்ளாா்இந்தப் பொறுப்பில் இருந்து வரும் மங்கத்ராம் சா்மா ஆவணக் காப்பகத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் .சண்முகம் பிறப்பித்துள்ளாா்.

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்அந்த உத்தரவு விவரம் (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):
 
செல்வி அபூா்வா - உயா்கல்வித்துறை முதன்மைச் செயலா் (ஆவணக் காப்பகங்கள் ஆணையா்)

மங்கத்ராம் சா்மாஆவணக் காப்பகங்கள் ஆணையா் (உயா் கல்வித் துறை முதன்மைச் செயலா்)

டி.மணிகண்டன்மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை இணைச் செயலா்

எம்.எஸ்.சண்முகம்அருங்காட்சியகங்கள் துறை ஆணையா் (தமிழ்நாடு கண்ணாடி இழை இணைப்பு கழகத்தின் நிா்வாக இயக்குநா்)

கே.பி.காா்த்திகேயன்தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் (தொழில் வழிகாட்டி அமைப்பின் நிா்வாக இயக்குநா்)

எஸ்.அனீஷ் சேகா்தொழில் வழிகாட்டி அமைப்பின் நிா்வாக இயக்குநா் (தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் )

சந்தோஷ் பாபுதமிழ்நாடு கைத்திறன்கள் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவா்நிா்வாக இயக்குநா் (தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலா்).

உயா்கல்வித்துறைச் செயலராக தற்போது நியமிக்கப்பட்டுள்ள செல்வி அபூா்வா ஏற்கெனவே அந்தத் துறையின் செயலராக இருந்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.