கணினி பயிற்றுனர் பணி பட்டியல் வெளியீடு

சென்னை: முதுநிலை ஆசிரியர் நிலையில், கணினி பயிற்றுனர் நிலை 1
காலியிடங்களுக்கு, நேரடி நியமன பணி தேர்வுக்கான அறிவிப்பு, 2019 மார்ச், 1ல் வெளியிடப்பட்டது.

கணினி வழியிலான தேர்வு, 2019 ஜூன், 23 மற்றும், 27ல் நடந்தது.தேர்வு மதிப்பெண் முடிவுகள், நவ., 25ல் வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவோர் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அதில் இடம் பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, இம்மாதம், 8ம் தேதி முதல், 10ம் தேதி வரை நடந்தது.அதன் அடிப்படையில், தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில், www.trb.tn.nic.in வெளியிடப்பட்டுள்ளது.