பி.இ.ஓ., பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

சென்னை:பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள, வட்டார கல்வி அதிகாரி இடங்களுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.

தமிழக பள்ளி கல்வி துறையில், பி.இ.ஓ., என்ற வட்டார கல்வி அதிகாரி பதவிகளில், 97 காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வு, பிப்ரவரி 15, 16ம் தேதிகளில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.இந்த தேர்வுக்கு ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவு, டிசம்பர் 19ல் துவங்கியது. பதிவுக்காக நீட்டிக்கப்பட்ட அவகாசம், இன்றுடன் முடிகிறது.