தேசிய திறனாய்வு தேர்வு

சென்னை:தேசிய திறனாய்வு தேர்வு எழுதியுள்ள மாணவர்களின் விபரங்களில்,
திருத்தங்கள் செய்து கொள்ள, பள்ளிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற, மாநில அளவில், நவம்பர், 3ல், தேசிய திறனாய்வு தேர்வு நடந்தது. தேர்வு எழுதியுள்ள மாணவர்களின் விபரம், www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகள் தங்களுடைய, பயன்பாட்டு அடையாள எண் மற்றும் ரகசிய குறியீட்டை பயன்படுத்தி, பெயர், பாலினம், பிறந்த தேதி, ஜாதி போன்றவற்றில், திருத்தங்கள் செய்வதாக இருந்தால், ஜன., 6 முதல், 10ம் தேதி வரை, செய்து கொள்ளலாம்.