வங்கி ஊழியர்கள் 5 நாள் ஸ்டிரைக்

தர்மசாலா;பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, யு.எப்.பி.யு., எனப்படும் வங்கி யூனியன்களின் கூட்டமைப்பு, வரும், 31 மற்றும் பிப்., 1ம் தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளது.

அதைத் தொடர்ந்து, மார்ச், 11 முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தமும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஹிமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில்,அமைப்பாளர் சஞ்சீவ்குமார் பண்ட்லிஷ் கூறியதாவது:'ஊதிய விகிதத்தை திருத்தி அமைக்க வேண்டும். அடிப்படை ஊதியத்துடன், சிறப்பு படிகளை இணைக்க வேண்டும்.'புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' என, பல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மூன்று கட்டமாக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.முதல் கட்டமாக, வரும், 31 மற்றும் பிப்., 1ம் தேதிகளில், வேலை நிறுத்த போராட்டம் நடக்கும். இதன்பின், மார்ச், 11ம் தேதி முதல், தொடர்ந்து மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.இதன் பிறகும் எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், ஏப்ரல், 1ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவும், முடிவு செய்துள்ளோம். இதுபற்றி, இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவர், நிதிசேவைகள் துறை செயலர், மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின், தொழிலாளர் நல தலைமை கமிஷனர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இந்த கூட்டமைப்பில், ஒன்பது வங்கி யூனியன்கள் இணைந்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.