5 புதிய மாவட்டங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களை நியமிக்க கோரிக்கை!

பொதுத்தேர்வு நெருங்குவதால் புதிதாக உரு வாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு முதன்மைக்கல்வி அலு வலர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது . இது தொடர்பாக அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் பி . கே . இளமாறன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழகத்தில் நிர்வாகம் சிறப்பாகவும் துரிதமாகவும் நடை பெற புதியதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும் . தென்காசி , கள்ளக்குறிச்சி , திருப்பத்தூர் , ராணிப் பேட்டை செங்கல்பட்டு ஆகிய ஐந்து புதிய மாவட்டங் களுக்கு மாவட்ட ஆட்சியாளர்கள் , காவல்துறை அதிகா ரிகள் நியமிக்கப்பட்டு நிர்வாகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது . ஆனால் கல்வித் துறைக்கு மட்டும் மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படாததால் ஒரே மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் இரண்டு மாவட் டப் பணிகளை பார்ப்பதினால் மிகுந்த சிரமம் ஏற்பட் டுள்ளது . குறிப்பாக , மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகி றது . மேலும் நிகழாண்டு 5 , 8 , 10 , 11 , 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதால் பள்ளிகளை கண்கா ணித்து உரிய நடவடிக்கை எடுத்திடவும் தேவையான ஏற்பா டுகள் செய்திடவும் தொய்வு ஏற்படுகிறது . இரண்டு மாவட்ட நிர்வாகங்களுடன் அதாவது இரண்டு ஆட்சித் தலைவர்களுடன் ஒரே முதன்மைக் கல்வி அலுவ லர் மாவட்டச் சூழலுக்கேற்ப செயல்படுவது சிரத்தை ஏற்ப டுத்துகிறது .

வெவ்வேறு நிர்வாகத்தோடு மாறுபட்ட சூழலில் திட்டங் களை அமல்படுத்துவதில் பெரிதும் இடையூறுகள் ஏற்படு கின்றன . எனவேமாணவர்களின் நலன் கருதியும் பொதுத்தேர்வுகள் நெருங்குவதாலும் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட 5 மாவட் டங்களுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர்களை நியமிக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறியுள்ளார் .