பி.இ.ஓ., தேர்வு 21 வரை அவகாசம்

சென்னை,பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள, 97 வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு, வரும், 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் அவகாசம் அளித்துள்ளது. தமிழக பள்ளி கல்வி துறையில், பி.இ.ஓ., என்ற, வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு, பிப்., 15, 16ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. தேர்வுக்கு, 'ஆன்லைன்' வழி விண்ணப்பம், 2019 டிச., 19ல் துவங்கியது. அதற்கான அவகாசம், ஏற்கனவே முடிந்த நிலையில், வரும், 21ம் தேதி வரை நீட்டிப்பு செய்து, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. -