தமிழகத்திற்கு ரெட் அலர்ட்

சென்னை : தமிழகத்தில் இன்று (டிச.,01) அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், ரெட்
அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரெஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் இடையே, சென்னையில், வில்லிவாக்கம், பெரம்பூர், அடையாறு, மந்தைவெளி, திநகர், நங்கநல்லூர், மீனம்பாக்கம், பல்லாவரம், கோயம்பேடு, அண்ணா நகர் பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூர், மணலி, கொளத்தூர், பாடி, மாதவரம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.